உலகத்தமிழ்க் கல்விக்கழகம்

உலகத்தமிழ்க் கல்விக்கழக ஆசிரியர்கள்

உலகத்தமிழ்க் கல்விக்கழக ஆசிரியர்கள்

ரா. மாரியம்மாள், M.A., M.Phil.,
மொழி ஆய்வாளர்.

"வணக்கம். என் பெயர் ரா. மாரியம்மாள். நான் தமிழில் இளநிலை ஆய்வுப்பணி முடித்துள்ளேன். எனக்குத் திருக்குறள் என்றால் கொள்ளைப் பிரியம். திருக்குறள் 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டப் பெருமையுடையது. ஒவ்வொரு குறளும் நம் வாழ்க்கையில் ஒரு அனுபவத்தையோ ஒரு படிப்பினையா நினைவுபடுத்துகிறது அல்லது கற்றுத் தருகிறது. இத்தகைய திருக்குறளின் பெருமையை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதையே நான் என் வாழ்வின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்."

ம. இளையராஜா, D.T.Ed., B.A.,
மொழி ஆய்வாளர்.

"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்ற வாக்கிற்கிணங்க தமிழனாய்ப் பிறந்து தலை நிமிர்ந்து நிற்கும் எனது பெயர் ம. இளையராஜா. திரைகடல் ஓடி திரவியம் தேடவில்லை தமிழன். திரைகடலைத் தாண்டிச் சென்று தமிழின் பெருமையை நிலைநாட்டவே அங்கு சென்றான். நானும் அந்த மரபினன் தான். தமிழின் பெருமையை உலகறியச்செய்யும் நோக்கோடு தமிழ் ஆசிரியராய் வந்துள்ளேன். தமிழ் என்னும் அழகிய பெரு வானத்தில் ஒரு சிறு விண்மீனாய் இருந்து தமிழ் வானுக்கு அழகு சேர்ப்பேன் என்று உறுதிமொழி கூறுகிறேன்."

ம. நடராசன், M.A., B.Litt., T.P.T, B.Ed.,
தமிழ் ஆசிரியர்.

"வணக்கம் எனது பெயர் ம. நடராசன். இளங்கலை தமிழ்ப் புலவர் பயிற்சி முடித்துள்ளேன். எனக்கு தெனாலிராமன் கதைகள் மற்றும் திருக்குறள் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு தெனாலிராமன் கதையையும், திருக்குறளையும் ஆழ்ந்த மனதுடன் கற்றுக்கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்."

க. ரேவதி, (B.Litt).,
தமிழ் துணை ஆசிரியர்.

"அனைவருக்கும் வணக்கம். என் பெயர் க. ரேவதி. நான் கதைகள், நாடகங்கள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருப்பேன். கதைகள், நாடகங்கள் மூலம் எளிதில் சிறுவர்களுக்கு நன்னெறியையும், சமுதாயத்திற்கு விழிப்புணர்வினையும் ஏற்படுத்த முடியும். சின்னஞ்சிறு விழிப்புணர்வு நாடகங்கள், கதைகள் ஆகியவற்றை ஆவலுடன் எழுதி வருகிறேன்."

சு. கிருஷ்ணலட்சுமி, M.A.,B.Ed.,
தமிழ் ஆசிரியர்.

"அனைவருக்கும் வணக்கம். என் பெயர் சு. கிருஷ்ணலட்சுமி. நான் முதுகலைத் தமிழ் முடித்துள்ளேன். எனக்கு பாடல் மற்றும் கதைகள் மிகவும் பிடிக்கும். அதிலும் நாட்டுப்புறப் பாடல்கள் என்னை மிகவும் ஈர்த்தவை. நாட்டுப்புற பாடல்களின் எதுகை, மோனை வரிகள் படிப்பதற்கு எளிமையானவை. எனவே பாடல்களின் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக்கொடுப்பதை நான் விரும்பி செய்து வருகிறேன்."

செ. மெல்வின்ராஜா, M.A., M.Phil., B.Ed.,
தமிழ் ஆசிரியர்.

"ஓதுவது ஒழியேல்" என்ற அவ்வைப் பாட்டியின் சொல்லுக்கு இணங்கி கற்பது தொடர வேண்டும் என்ற ஆர்வம் தான் நான் ஆசிரியர் பணிக்கு வரக்காரணம், "உயர்ந்த மொழி தான் தமிழென்று உரக்கச் சொல்ல வந்துள்ளேன்". நான் கற்றால் மட்டும் போதுமா? கல்வியின் பயனை மற்றவர்க்கு உரைப்பது தான் மகிழ்ச்சி அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் செ.மெல்வின்ராஜா ஆகிய நான் பெருமிதம் கொள்கிறேன்.

மு.இராசா, M.A.,B.Ed.,
தமிழ் ஆசிரியர்.

"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிது ஆவது எங்கும் காணோம்". என்ற பாரதியாரின் வாக்கினை உலக அரங்கில் பறை சாற்றுவோன். எனது பெயர் மு.இராசா. அச்சிட்ட எழுத்துக்கு அர்த்தம் சொல்லுவது மட்டுமே ஆசானின் வேலையல்ல. கதை, கவிதை, கட்டுரை என பன்முகம் கொண்ட நான். எனது மாணாக்கரையும் அப்படியே உருவாக்குவேன். தமிழ் கற்கும் போது என் தாயின் கருவறை சுகத்தை நான் மீண்டும் உணர்ந்தேன். இந்த உணர்வினை தமிழ் ஆசிரியராக இருந்து மாணாக்கருக்கு உணர்த்துவதில் மகிழ்ச்சியே.

கோ.சந்திரசேகர், M.A.,B.Ed.,
தமிழ் ஆசிரியர்.

'தமிழுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் அதை தமிழில் செய்' என்ற பொன்மொழிக்கேற்ப தமிழின் பெருமைகளை உலகறியச் செய்வோன் கோ.சந்திரசேகர். திருக்குறளிலும், நாட்டுப்புறப் பாடல்களிலும் எனக்கு மிகுந்த ஆர்வம். இதன் ஆழ்ந்த கருத்துக்களை மாணவர்களுக்கு கற்றுத் தருவது பெரு மகிழ்ச்சியே!

உலகத்தமிழ்க் கல்விக்கழகம்

 முகப்பு~  இணைய வகுப்பு (Online Class)~  கட்டண விபரங்கள் (Fees Structure)~  நற்சான்றுகள்~  பாராட்டுப்புள்ளிகள்~  தொடர்புக்கு

World Tamil Academy ©www.tamilacademy.com