உலகத்தமிழ்க் கல்விக்கழகம் | Tamil academy | learn tamil | World tamil academy

உலகத்தமிழ்க் கல்விக்கழகத்திற்கு நல்வரவு

   

உலகத்தமிழ்க் கல்விக்கழகம்


                        தமிழ் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே இணையவழியாக தமிழ் கற்கும் வகையில் உலகத்தமிழ்க் கல்விக்கழகம் இணையவழி தமிழ் வகுப்புகளை நடத்துகின்றது.

                        உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தின் முக்கிய நோக்கமானது வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வமுள்ள குழந்தைகள் தமிழ் திறன் பெற்று தமிழில் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுப்பதாகும்.

                        தமிழ் பேசத் தெரிந்த குழந்தைகளும் மேலும் நன்கு தமிழ் கற்றுத் தமிழில் புலமைப் பெற்றுத் திகழ்வதும் உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தின் நோக்கமாகும். இதற்காக பிரத்யேகமாக நாங்கள் உருவாக்கியுள்ள பாடத்திட்டங்கள் மழலைக் கல்வி முதல் ஏழாம் நிலை வரை எளிய எட்டு நிலைகளாக இங்குத் தரப்பட்டுள்ளது.

                       இந்தப் பாடத்திட்டங்கள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் உருவாக்கப்பட்டுக் கற்றுத் தரப்படுகின்றது. இப்பாடத்திட்டங்கள் முழுவதும் உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தின் வாயிலாக ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் நேரடி இணையவழியில் தமிழ்க் கற்பிக்கப்படுகின்றது.

                       வகுப்பில் பங்கேற்ற பின் அச்சிட்டு படிக்கும் பாடங்கள் மற்றும் பணித்தாள்களும், தமிழ் திறனை சோதிக்க வினாக்களும், பெற்றோர் உதவியுடன் வகுப்பில் கற்றப் பாடங்களை மறுபார்வையிட கற்பித்தல் தளவாடங்களைப் பதிவிறக்கம் செய்யும் வசதிகளும் உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தில் தரப்பட்டுள்ளது. தங்களின் தமிழ் திறனை சோதிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் பகுதியில் தமிழ் திறனை சோதித்தறிந்து தகுதிக்கேற்ற சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றது.

   தமிழ் வகுப்பில் பங்கேற்கும் குழந்தைகள் நன்கு தமிழ் கற்றுத் தமிழில் பேசவும் எழுதவும் சிறந்தத் திறனைப் பெற வாழ்த்துகிறோம்....

உலகத்தமிழ்க் கல்விக்கழகம்

 முகப்பு~  இணைய வகுப்பு (Online Class)~  கட்டண விபரங்கள் (Fees Structure)~  நற்சான்றுகள்~  பாராட்டுப்புள்ளிகள்~  தொடர்புக்கு

World Tamil Academy ©www.tamilacademy.com